மனதின் மகத்தான சக்தி !

அகிலத்தின் அற்புதம் மனம் என்னும் கற்பனை இயந்திரம்

பிரச்சனையை எதிர்கொள்ளல்

மனம் செய்யும் விந்தை !!!

Friday, November 14, 2014





எல்லோருக்கும் வணக்கம்,
இவ்வளவு நாளா எங்கப்பா போய்ட்டா என்று கேட்கிறது புரியுது.
எக்கச்சக்கமான பிரச்சனைகளின் புயலிற்குள் சிக்கி சின்னா பின்னமாகி வெளியே வர தாமதமாகிற்று.
காத்திருந்த அனைவருக்கும் நெஞ்ஞார்ந்த நன்றிகள்.

இப்போதெல்லாம் உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று கேட்டால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பதிலே பெரும்பாலானோர்களிடமிருந்து வருகின்றது.
இது நான் கண்ட அனுபவ உண்மை.

நிம்மதியான சந்தோசமான வாழ்க்கை இருந்தால் போதுமே என்று கேட்டதிற்கு பணம் இருந்தால் தானே இந்த சந்தோசம், நிம்மதி எல்லாம் கிடைகிறது என்று சொல்லும் நிலை வந்து விட்டது.
இது கேலிக்குறிய விசயம் இல்ல. கவலைக்குரிய விசயம்.
வாழ்க்கைக்கு பணம் இன்றியமையாதது என்பது உண்மை தான்.




பணம் மட்டுமே வாழ்க்கை இல்லையே.
கோடிக்கணக்கில் பணம் புரளும் பிஸ்னஸ் ஜாம்பவான்கள் கூட நிம்மதி தேடி கிராமங்கள்,காடுகள்,மலைகள் என்று வெக்கேசன் போவது பற்றி ஒன்லைன் செய்தித் தளங்கள் அடிக்கடி செய்தி வெளியிடுவது அனைவரும் அறிந்ததே.

அவர்களிடம் இருக்கும் பணம் ஏன் அவர்களுக்கு நிம்மதியைத் தரவில்லை என்று கொஞ்சம் யோசியுங்கள்.
நிம்மதியையும் சந்தோசத்தையும் தருவது பணம் அல்ல.மனம் தான்.
பணம் இருந்தால் சந்தோசம் வரும் என்று உங்கள் மனதை நினைக்க வைத்திருக்கின்றீர்கள்.
மனம் நினைப்பதை அடைந்தால் தான் நிம்மதி அடையும். அந்த நினைப்பை மாற்றுவது அவ்வளவு எளிதும் அல்ல, நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமும் அல்ல. பழைய பதிவுகள் மனம் பற்றிய விடயங்களையும் அதன் செயற்பாடுகளையும் கூறும்.

சிலருக்கு இந்த எண்ணம் வேறுபடுகிறது. சிலர் ஒர் குறிக்கோளுடன் செயற்படுவார்கள். மனதை எண்ணங்கள் இல்லாமல் வைத்திருத்தல் மிகவும் கடினமான செயல். மகான்களுக்கும் யோகிகளுக்கும் இது கைகூடும்.

மனிதர்களால் எண்ணங்கள் இல்லாமல் செயற்பட முடியாது, அதற்காக பயனற்ற எண்ணங்களோடு பணியாற்றுவது வீண் செயல்.

பயனுள்ள எண்ணங்கள் வாழ்க்கையை உயர்விற்கு கொண்டு செல்லும்.
பணம் எப்போதும் மனித வாழ்விற்கு தேவையான ஒன்று.



"நாம் செய்யும் செயல்கள் எமக்கு பணத்தை பெற்று தரலாமே தவிர பணத்திற்காக செயல்களை நாம் செய்யக்கூடாது."
அப்படிச் செய்யும் செயல்களால் நாம் உயரத்திற்கு ஒரு போதும் போக முடியாது. அதன் வளர்ச்சி மறைப் பெறுமானத்திலே தான் போகும்.

உங்கள் எண்ணங்கள் எப்போதும் உயர்ந்த ஒன்றாக இருக்க வேண்டும்.
அத்தகைய எண்ணங்கள் உங்களை சிறந்த மனிதனாக்கும்.

உயர்ந்த குறிக்கோள் ஒன்றை எண்ணி அதற்காக உழைக்கும் போது சந்தோசம், நிம்மதி அனைத்தும் உங்களுடன் பயணிக்கும்.


                    வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் !!!

Tuesday, September 2, 2014

அடுத்து என்ன செய்யலாம்

Posted by Saruban On Tuesday, September 02, 2014


வணக்கம் நண்பர்களே,
முந்தைய பதிவுடன் மனதை டியூன் அப் செய்வது பற்றிய தொடர் முடிவடைந்தது என்று நினைச்சுடாதிங்க.
ஒரு சில பதிவுகளில் மனம் எனும் மாபெரும் சக்தியை விளக்கி விட முடியாது,  இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை விளக்க முற்பட்டிருக்கிறேன்.

முதன் முதலில் பயிற்சிக்குட்படுத்தப்படும் குதிரை எப்படி அடங்காமல் அடம்பிடித்து திசை மாறி செல்கிறதோ அது போலவே மனித மனமும் முதலில் முரண்டு பிடிக்கும்.

குதிரை திசை மாறுகின்றது என்பதற்காக அதை அப்படியே விட்டுச் செல்கிறான குதிரையோட்டி.
இல்லையே மீண்டும் மீண்டும் சரியான திசைக்கு கொண்டு வருவதில்லையா.
பெரும் விலை மதிப்புள்ள குதிரை என்பதால் தானே இவ்வளவு கவனம், அதன் பயன் பெரிது என்பதால் தானே இவ்வளவு கரிசனம் .
குதிரைக்கே இவ்வளவு பாடுபட வேண்டுமென்றால் விலை மதிப்பற்ற மனித மனதை நம் வழிக்கு கொண்டுவர எவ்வளவு பாடுபட வேண்டும், எவ்வளவு பொறுமை வேண்டுமென எண்ணிப்பாருங்கள்.

ஆனால் இவையனைத்திற்கும் கிடைக்கும் பயன் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.  உங்கள் வாழ்க்கையை உயர்த்தப் போகும் செயல்பாடுகளுக்காக நீங்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பீங்க என்று எனக்குத் தெரியும்.

இலக்கை நிர்ணயித்து எறியப்படும் அம்பை விடவும் வேகமான மனோ சக்தியையுடைய நாம் எம் இலக்கை அடைவது உறுதி.
உங்களைத் தவிர உங்களை யாராலும் வீழ்த்த முடியாது.
பின் என்ன கவலை.

(குசும்புக்காரன்: அதான் அண்ணணே சொல்லிட்டாரே,அப்புறமேன் இந்த ப்ளொக்க (blog) பாத்துட்டிருக்கீங்க.  போங்க, இலக்க நிர்ணயிங்க. அர்ச்சீவ் பன்னுங்க.
ஏதோ இன்னைக்குத்தான் பிரயோசனமா சொல்லிருக்க.)

இதெல்லாம் சரி.  அடுத்ததா என்ன Topic ல ஆராய்ச்சிய தொடங்கலாம்னு திங் பன்னிட்டிருக்கன். பதிவின் தலைப்பே அதானேப்பா.
ம்....
பார்ப்பம் என்ன தோனுதின்னு.

அடுத்த வருகைக்காகக காத்துக்கிட்டுருக்கேன்.
நான் உங்களதான்பா சொல்றேன். வருவீங்க தானே.


சாதாரண இயந்திரமொன்றை சரிசெய்வதைப்போல் மனதினை டியூன் செய்வது இலகு என்றும் கூற முடியாது,அதுக்காக ஒரேயடியாக கடினம் என்றும் சொல்லிவிட முடியாது.
முயற்சி செய் முடியாவிட்டால் பயிற்சி செய் என்பதற்கிணங்க செயற்படுவோம்.நிச்சயம் வெற்றி பெறுவோம்.





முதலில் உங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கு புரிதல் என்பது உங்களின் அகம் சார்ந்த அதாவது ஆழ்மனது பற்றிய உயர்வான ஓர் எண்ணத்தை கொண்டிருக்க வேண்டும்.
நிச்சயமாக ஆழ்மனதிடம் உள்ள அளப்பரிய சக்தியினால் நமக்கு வேண்டியதை நேர் வழியிலேயே அடைய முடியும் என்பதனை உறுதியாக நம்புவது அவசியம்.

இதுவரை காலத்தில் உங்களைப் பற்றிய பல விதமான அபிப்பிராயங்களை பலர் கூறக் கேட்டிருக்கலாம்.
அதில் பல நம்மை தாழ்த்தி கூறப்பட்டிருக்கலாம்.
இப்போது அவையனைத்தையும் தூக்கி வீசுங்கள் என்றும் உங்கள் பக்கம் வராதவாறு. (தயவு செய்து மனதின் ஒரு ஓரத்தில் மட்டும் வைத்து விடாதீர்கள், பின் மீண்டும் அது தொல்லை கொடுக்கும்.)

அது எப்படி தூக்கி எறிவது என்று முனுமுனுப்பது கேட்குதுப்பா..
நீங்க இப்ப உயிரோட இல்லைன்னு உங்களுக்கு ஒருத்தர் போன் பன்னா நீங்க என்ன பன்னுவிங்க.
முதல்ல சொன்னவன் லூசு என்றத கன்போர்ம் பன்னீருவிங்க. அப்புறம் அவன்கூட பழகுறத குறைச்சுருவீங்க.
ஏன் இப்பிடில்லாம் செய்ரீங்க.
ஏன்னா உங்களுக்கு தெரியும் நீங்க உயிரோட இருக்குறது, அப்புறமென்ன...





அது மாதிரித்தான் இதுவும் உங்களப்பத்தி அதிகமாக தெரிஞ்சது நீங்க மட்டும் தான். இது உண்மை தான்ங்க. நம்புங்க!
உங்க மனதின் சக்தி பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கன்.
அப்ப எவனோ ஒருத்தன் உங்கள பத்தி தாழ்வா சொன்னா அதநம்புவீங்களா?
நம்பாதீங்க ப்ளீஸ்.
(குசும்புக்காரன்: என்னடா நீ முதல்ல‌ நம்புங்கடா என்றா இப்ப நம்பாதிங்கடா என்றா , எங்கள பாத்தா உன்க்கு என்னா தோனுது???)

உங்களைப் பற்றிய தாழ்வான கருத்துக்களை கொண்டவர்களிடம் இருந்து வரும் அவதூறுகளை செவிமடுக்காமல் அவர்களிடம் இருந்து விலகி இருப்பதே உங்களை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
உங்களைப் பற்றி தவறாக சொல்லுபவர்களிடம் தயவு செய்து கோபப்பட வேண்டாம்.அவர்கள் வளர்ந்த சூழல் அவர்களை அவ்வாறு பேசும் படி வைத்திருக்கலாம்.
தனக்கு தெரிந்த விடயத்தையே அனைவரும் செய்ய முயற்சிப்பார்கள்.
உண்மையில் அவர்கள் மேல் இறக்கம் காட்டி அங்கிருந்து நகருங்கள்.


நீங்க எந்த துரையில சாதிக்கனும் என்று நினைக்கிறீங்களோ அதில் உங்களால் சாதிக்க முடியும். ஏனெறால் அது உங்களால் உங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.உங்கள் நோக்கம் உங்களால் முடிவு செய்யப்பட்டது.

எந்த ஒரு முடிவையும் பதற்றத்திலோ, பயத்திலோ, அவசரத்திலோ எடுத்தல் ஆபத்தான விளைவுகளை தேடித்தரும்.
அதனால் ஏற்படப்போகும் நன்மை தீமைகளை அலசி ஆராய்வதில் கவனத்தை செலுத்துங்கள்.
இவ்வாறான சிந்தனைகள் ஒரு நொடியில் வரப்போவதில்லை. தொடர்ச்சியான பயிற்சிகளும் முயற்சிகளும் உங்களை அணுவணுவாக செதுக்கும்.





எப்போதும் உங்கள் இலக்குகளின் மேல் நம்பிக்கையுடன் இருங்கள். எவ்வளவு தோல்விகள் வருகின்றதென கவலைப்படாதீர்கள்.
அவற்றை தோல்விகள் என்று சொல்வதை நிறுத்துங்கள்.
உங்கள் இலக்கை அடைய இவ்வழி சரியானதல்ல என்பதை அவை உணர்த்துகின்றன. எவ்வாறெல்லாம் உங்கள் இலக்கை அடைய முடியாதென அவை உங்களுக்கு கற்றுத்தருகின்றன.
அது மீண்டும் அவ்வழியில் நீங்கள் சென்று சிக்கித்தவிப்பதை தவிர்க்கும்.

உங்கள் முயற்சிகள் வெற்றியளித்தால் அது பற்றி பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளாதீங்க.
அது உங்களை அவ் வெற்றியிலேயே முடக்கி விடலாம்.
ஒவ்வொரு வெற்றியும் உங்கள் வழி சரியானதென்பதை உணர்த்துகிறது என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.
இலக்கை அடைய மட்டும் நீங்கள் எந்தவொரு பிரச்சனைகளுக்குள்ளும் உள்நுழையாதீங்க.பிரச்சனைகள் எப்போதும் உங்களை சுற்றி நிற்பதாக சொல்றீங்களா?
நிச்சயம் எப்போதும் பிரச்சனைகள் இருப்பது தானே வாழ்க்கை, அதிலென்ன மாற்றம். ?

பிரச்சனையில்லமல்,தடைகள் இல்லாமல் மாபெரும் சாதனைகள் எங்கயாவது நடந்திருக்கிறதா?

இங்கு பிரச்சனை , பிரச்சனை நம்மை சுற்றி இருப்பதில்ல.
(குசும்புக்காரன்: இப்ப உனக்கென்னடா பிரச்சனை)

அப் பிரச்சனையை நாம் எதிர் கொள்ளும் விதமும் அது பற்றிய எமது கண்ணோட்டமும் தான்.
புறா ஒன்று மழை வரும் போது மரக்கிளைகளுக்குள் சென்று ஒதுங்குகிறது. ஆனால் கழுகு முகில்களின் மேலாக பறந்து மழையில் இருந்து விலகிக் கொள்கிறது.
இங்கு மழை இரண்டிற்கும் பொதுவான பிரச்சனையாகத்தான் வந்தது.
ஆனால் இரண்டு பறவைகளும் அப்பிரச்சனையை எதிர்கொண்ட விதத்தை பார்த்தீங்களா?
புறாவுக்கு பிரச்சனையின் தாக்கம் குறைவாக இருக்கும்.கழுகுக்கு பிரச்சனையே இல்லை என்றாகிவிட்டது.

இது போலத்தான் நாமும் இருக்க வேண்டும்.
பிரச்சனை வருவது உங்களுக்கு தான் ஆனால் அதன் தாக்கம் உங்களின் ஆழ்மனதையோ ,இலக்கினையோ பாதிக்க கூடாது.
பிரச்சனை என்னை ஒன்றும் செய்து விடாது எனபதை முழுமையாக நம்புங்கள்.
அந்த முழு நம்பிக்கையே பிரச்சனையின் தாக்கம் உங்களை ஏதும் செய்து விடாது. வருவது வரட்டும் பார்க்கலாம் என்ற உறுதியான நம்பிக்கையுடன் எப்போதும் இருங்கள்.


உங்களால் உங்களுக்காக நிச்சயிக்கப்பட்ட இலக்கை உங்களால் அடைய முடியுமென 100% நம்புங்கள்.
நிச்சயம் உங்களால் உங்களால் உங்கள் இலக்கை அடைய முடியும்.

உங்களை நீங்களே தயார்ப்படுத்தும் நேரமிது. இனியும் தாமதிக்க வேண்டாம்.

வருகைக்கு நன்றி நண்பர்களே !


Monday, September 1, 2014

மனதின் மகத்தான சக்தி !

Posted by Saruban On Monday, September 01, 2014

கண்ணுக்கு புலப்படாமல் இருந்தாலும் மனதின் சக்தி எல்லையில்லாதது.
அதை சரியான முறையில் ஒழுங்கமைத்து விட்டால் வாழ்நாள் முழுவதும் அச் சக்தியின் பலனை நாம் அனுபவிக்கலாம்.




நாம் விலையுயர்ந்த ஹோம் தியேட்டர் ஒன்றை வைத்திருந்தாலும் அதன் வொலியூம் லெவெல் குறைக்கப்பட்டால் அதிலிருந்து வெளிவரும் சத்தத்தின் அளவு குறைவாகவே இருக்கும் என்பது நாம் அறிந்த்ததே.
 (குசும்புக்காரன்: தியேட்டருக்கு போகவே வழியில்ல அதுக்குள்ள நீ.... என்ன அது ம்.. ஹோம் தேட்டர் . போடா டேய் போடா.)
நீங்கள் இதை அனுபவ ரீதியாக அறிந்த்திருக்க கூடும்.

அது போலத்தான் எல்லையில்லா சக்தியை கொண்ட மனதினை நாம் கொண்டிருந்தாலும் அதனை தாழ்வாக டியூன் செய்து வைத்திருந்தால் அதிலிருந்து சிறந்தவற்றை எதிர்பாக்கலாமா?

இப்போது நம் மனதின் சக்தி நம்மால் பயன்படுத்த முடியமைக்கான காரணம் தெரிந்திருக்கும்.
தெரிந்தோ தெரியாமலோ நாம் சிருவயதிலிருந்தே நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளின் தாக்கத்திற்குட்பட்டு தாழ்வான ஒரு நிலைக்கு நம் மனதினை டியூன் செய்து வைத்திருக்கிறோம்.

சிறு குழந்தை ஒன்று புதிதாக ஒரு விடயத்தை முயற்சிக்கும் போதோ அல்லது சிக்கலான கேள்வியை எழுப்பும் போதோ குழந்தையின் உறவினர்கள், பெற்றோர்கள் அதனால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என பயந்த்தே அக்குழந்தையின் முயற்சியை தடுத்து விடுவார்கள்.
அவர்கள் செய்வது தவறல்ல .அது அவர்கள் குழந்தையின் மேல் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு.

ஆனால் சிலர் குழந்தை கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வழி தெரியாமலோ அல்லது இது வீணற்ற செயல் என எண்ணியே அவர்களை கண்டிக்கின்ற‌னர்.
இது முற்றிலும் தவறானது மன, மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும் இக் காலகட்டத்தில் குழந்த்தையின் மனதில் நல்ல சிந்தனைகளும் புதுமையான விடயங்களும் புகுத்தப்பட வேண்டும்.
எதையும் உன்னால் செய்ய முடியும் என்ற எண்ணத்தை அக் குழந்தையினுள்ளே விதைக்க வேண்டும்.
விதைத்தவன் உறங்கலாம் ஆனால் விதைகள் உறங்குவதில்லை.

விதைகப்பட்ட நல்லெண்ணங்களும் சிந்தனைகளும் வளர்ந்து ஆலமரம் போல் வேர் ஊன்றி கிளை பரப்பி நிற்கும்.
அதுவே எதிர்காலத்தில் அக் குழந்தை மேன்மையுற உதவும்.



இப்போது கூட காலம் போய் விடவில்லை. சிறப்பான முறையில் மிகவும் நுணுக்கமாக மனதை டியூன் செய்து விட்டால் போதும். அது தன்பாட்டிற்கு இயங்கத்துவங்கும்.

மனதினை டியூன் செய்ய சில வழிமுறைகள் உள்ளது. முறையான பயிற்சியின் மூலம் பழக்கத்திற்கு கொண்டுவரமுடியும்.
எவ்வாறென அடுத்த பதிவில் காண்போம்.

வருகைக்கு நன்றி நண்பர்களே.


Saturday, August 30, 2014

பிரச்சனையை எதிர்கொள்ளல்

Posted by Saruban On Saturday, August 30, 2014

பொதுவாக பிரச்சனைகளே மனிதனின் மனநிலையை மாற்றி பாதிப்பை தேடித்தருகிறது.





ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள அத்தருணத்தில் நாம் இருக்கும் மனநிலை ரொம்ப முக்கியம்.
நம் மனநிலை இருக்கும் நிலையைப் பொருத்தே அப்பிரச்சனையின் விளைவு எம் மனதை தாக்கும் அளவு அதாவது வெயிட்டேச்சும் மாறுபடும்.

சிக்கல்களுக்குள் நாம் சிக்கித்தவிக்கும் வேளையில் மூளையின் தர்க்கத்திற‌னை நம் மனநிலை குறைக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.
அந்நேரத்தில் நிலைமையை புரிந்து கொண்டு அப்பிரச்சனையை மூளையின் உதவியுடன் அனுக வேண்டும்.
அது அவ்வளவு எளிதல்ல,ஆனால் தொடர் முயற்சியால் எதுவும் கைகூடும்.
எந்தவொரு விடயத்தை அனுக முன்னும் நொடிபொழுதில் அதன் விளைவு பற்றி சிந்தித்து செயலாற்ற வேண்டும். அதுவே பல பிரச்சனைகளை தவிர்த்து விடும்.
நாம் முதலில் நம் மனதினுள் இருக்கும் தேவையற்ற எண்ணங்களை துடைத்தெறிய வேண்டும்.
குப்பைகள் இருக்கும் இடத்தில் எப்பொழுதும் நமக்கு தேவையான பொருட்களை வைப்போமா?
இல்லை தானே.
நமக்குள் இருக்கும் மகத்தான சக்தியை உணர்ந்தால் எந்தவொரு தேவையற்ற / தீய எண்ணங்கள் நம்முள் வராது.

முந்தய பதிவொன்றில் மனதினுடைய சக்தி பற்றி அறியத்தந்திருந்தேன்.
மாபெரும் அகச்சக்தியை கொண்டுள்ள நாம் வீணாக பயனற்ற செயல்களை செய்து எம் சக்தியை வீணாக்க வேண்டுமா? அல்லது நம்மை நாமே தாழ்வாக எண்ணலாமா?
அனைவரினதும் பதில் இல்லை என்றே இருக்கும்.
நம் சக்தியை புரிந்து கொண்டிருந்தும் ஏன் எம்மால் சாதிக்க முடிவதில்லை.
இங்கு கவனிக்கத்தக்கது நாம் புரிந்து கொண்டுள்ளோமே தவிர ஏற்றுக்கொள்ளவில்லை.

இவையெல்லாவற்றிற்கும் காரணமென்ன, ஆழ் மனதிடம் உள்ள அளப்பரிய சக்தியை பயன்படுத்த விடாமல் தடுத்து பொய்யான ஒன்றை கற்பனை செய்ய வைத்து நம்மை திசை திருப்புகிறது நம் மேல் மனம். மேல் மனம் ஆழ் மனதிற்குரிய பாதையாக இருந்தாலும் அனைத்தையும் அது உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை.
அதனை தீர்மானிக்க வேண்டியது நாம் தான்.
எப்பொழுதும் நம் ஆழ் மனதினுள் தாழ்வான எண்ணங்களை அனுமதிப்பது கூடாது. அது மிகவும் ஆபத்தானது.
நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்பது எவ்வளவு தூரம் உண்மை என்பதை இங்கு புரிந்துகொள்ளலாம்.

ஆழ்மனது ஒரு விடயத்தை தீர்மானித்து விட்டால் அது இலகுவில் தன்னை மாற்றிக்கொள்வதில்லை, தன்னை அதுவாகவே மாற்றிக் கொள்கிறது.
நம் மனநிலையைப் பாதிப்பதில் ஆழ்மனம் செல்வாக்குச் செலுத்துகிறது.





எப்போதும் பிரச்சனைகளைப் பற்றியே சிந்திப்பதால் பிரச்சனை இலகுவில் தீரப்போவதில்லை. அப் பிரச்சனையை எவ்வாறு எதிர்கொள்வதால் அதிலிருந்து நம்மை விடுவிக்கலாம் என சிந்திப்பதே சிறந்தது.

பிரச்சனை உருவாகக் காரணம் நாமாகவோ அல்லது நம்மைப் போன்ற ஒரு மனிதனாகவோ தான் இருக்கக் கூடும்.
மனிதனால் உருவாககப்பட்ட ஒரு பிரச்சனையை தீர்க்க ஒரு மனிதனால் முடியாதென நினைக்கிறீர்களா?
நிச்சயம் முடியும்.
பிரச்சனையை உருவாக்கிய மட்டத்தில் இருந்து சிந்திப்பதை நிறுத்துங்கள், அது பிரச்சனையை தீர்க்க உதவாது.
வெவ்வேறு கோணங்களில் இருந்து சிந்தியுங்கள்.
முழுமையாக உங்கள் மனதின் மகத்தான சக்தியை ஏற்றுக்கொள்ளுங்கள்.
வாழ்வின் வெற்றிக்காக ஆழ் மனதின் சக்தியை பயன்படுத்துங்கள்.

மீண்டும் சந்திப்போம். 
 நன்றி.