Tuesday, June 24, 2014



இணையமெனும் பிரபஞ்சத்தினுள் உள்நுழைந்து பதிவை காண வந்திருக்கும் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் !

நீங்கள் பல Blog களுக்கு சென்றிருப்பீர்கள் அந்த Blogன் பதிவுகளை வைத்தே அந்த Blog பற்றி அறிந்து கொள்ள முடியும்.

அப்புறம் ஏன்டா அதுக்கெல்லாம் பதிவு எழுதுறா என்று நீங்கள் முனுமுனுப்பது புரிகிறது.

ஏதாவது எழுத வேண்டும் என்று நான் இந்த பக்கமா வரல்லைங்க.
அதுக்கு காரணமிருக்குங்க.
என்னடா இவன் எல்லாத்துக்கும் காரணம் சொல்லி சாகடிக்கிறானே என்றெல்லாம் யோசிக்காம கொஞ்சம் பார்த்துட்டு போங்க ப்ரண்ட்ஸ் !

எனக்கு தெரிஞ்சதையும் நான் சிந்திக்கிறதையும் பகிர்ந்து கொள்ள என்னை ஒத்த சிந்தனை உள்ளவர்கள் என் சமூகத்தில் இல்லையென்பதை விட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்வதே சாலச் சிறந்தது.
அதான் இந்தப் பக்கமா வந்தேனுங்க.
(எவனாவது பயபுள்ள சிக்காமலா போயிருவான்.)

அப்படி என்னத்ததான் நீ சிந்திக்கிறா என்று கேட்குறீங்களா , அதத்தான் இந்த Blogல சொல்ல போறேனே.
நிச்சயமா இது உங்களுக்கு புதுசா இருக்கும் . அப்புடித்தான் நான் நம்புறன்.
நீங்களும் நம்புங்க. ப்ளீளீளீஸ் !!!

எவ்வளவோ இடமிருக்க இந்தப் பக்கமா வந்ததுக்கு நன்றி !

குறிப்பு:
 Blogன் Title கொஞ்சம் வித்தியாசமா இருக்கேன்னு பார்க்குறீங்களா.
ம் !
Knowledge - அது எல்லாருக்கும் தெரியும்.
Pylon- தாங்கிச் செல்லுவது , இரு பிரமிட்களுக்கு இடையே பாலமாகச் செயற்படுவது என பொருள் கூறலாம்.

அதாவது அறிவை சுமந்து வரும் பாலமாக இந்த Blog செயற்படும் என்பதை அறியத் தருகிறேன்.

மர்மங்களை மர்மமாக அறிந்து கொள்ளுங்கள்.