Wednesday, August 27, 2014

மனம் செய்யும் விந்தை !!!

Posted by Saruban On Wednesday, August 27, 2014

வணக்கம் நண்பர்க்ளே,
சென்ற பதிவில் மனம் என்பதை பற்றிய சிறு விளக்கத்தை பார்த்தோம்.
 இன்றைய பதிவில் மனம் செய்யும் விந்தையை பற்றிப் பார்க்கலாம்.




மனம் பயணிக்கும் வேகத்திற்கு இணையானது இவ்வுலகில் ஏதும் இல்லை. (இப் பிரபஞ்சத்தில் வேண்டுமானால் இருக்கலாம்.)
ஆகையால் தான் இது செய்யும் விந்தை அளப்பரியதாக இருக்கிறது.

     
மனம் மாபெரும் சக்தி உடையது. மனதை கட்டுக்குள் கொண்டு வருவதால் அனைத்தும் வசப்படும் என்று சொல்ல முடியாது.
கட்டுப்படுத்தி வைக்கப்படும் மனதால் குறித்த ஓர் தேவையை வேண்டுமானால் சிறப்புற நிறைவேற்றலாம்.
ஆனால் வாழ்வை வசப்படுத்த முடியாது.
ஏனென்றால் அடக்குமுறைக்குட்படுத்தப்படும் அனைத்தும் ஒரு நாள் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தும்.(குசும்புக்காரன்: இப்ப என்னதான்பா சொல்ல வர்ரே நீ.)
அதுவே இயல்பான ஒன்றாக இருக்குமானால் அது அனைத்தையும் வசப்படுத்தும்.

மனதையும் தெளிவான நிலையில் இயல்பாக இருக்கப் பழக்கினால் அனைத்தும் உங்கள் வசம்.
பொதுவாக இந்நிலையில் இருப்பவர்கள் அரிது.

அவ்வாறு இருக்கப் பழக்குவது கடினமல்ல..அதற்காக இலகுவென்றும் எண்ண வேண்டாம்.( குசும்புக்காரன்: ஏய் முதல்ல நீ தெளிவா இருக்கியா, இல்லையான்னு சொல்லுடா)

ஒவ்வொருவர் மனநிலையும் வெவ்வேறு நிலைகளில் இருப்பதால் சிலருக்கு அது இலகுவாக கைகூடினாலும் பலருக்கு சற்று கடினமானதாக காணப்படும்.

'படகு இருந்தால் மட்டும் போதுமா துடுப்பு இருந்தால் தானே செல்ல வேண்டிய இலக்கை துல்லியமாகவும் சரியான நேரத்திலும் அடைய முடியும்.'

ஒருவன் எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும் அவனுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டிய தருணத்தில் அவனுடைய மனநிலை எந்நிலையில் இருக்கிறதென்பதை பொறுத்தே அந்நேரத்தில் அவனால் வெளிப்படுத்தப்படும் ஆற்றலின் தன்மையும் வேறுபடும்.

சிலர் மனநிலை நிலைகுலைந்தாலும் தானாகவே மறுபடியும் சீர் செய்யப்படும். சிலர் மனநிலையை சரிசெய்ய வேறு ஒருவரின் உதவி தேவைப்படும்.

சிலர் தானாகாவும் சரி செய்ய மாட்டார்கள், மற்றவர் உதவி கிடைத்தாலும் அதைப்புறக்கணிப்பர்.
அவர்கள் மிகவும் ஆழமாக உள்ளார்த்தாமாக பாதிக்கப்பட்டதால் அவர்களை ஓர் திடநிலைக்கு கொண்டு வருவது பகீரதப் பிரயத்தனம்.
அதிலும் சிலர் தாங்கள் இவ்வாறு ஆழமான பாதிப்புக்குட்பட்டுள்ளோம் என ஏற்க மறுப்பார்கள் அவர்கள் நிலை மேலும் கவலைக்கிடமானது.

கடைசியாகக் சொன்ன இரு நிலைகளும் பொதுவாக தற்கொலை எண்ணத்தை தூண்டுவதோடு தற்கொலைக்கும் இட்டுச் செல்கிறது.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் என்னுடைய நிலையும் கடைசியாக சொல்லபட்டதில் முதல் நிலை.
நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டதை அறிந்தும் மீள முடியாத படி இருக்கின்றேன். நானும் மனநிலை சரியில்லாதவன் தான்.
(குசும்புக்காரன்: இவ்வளவு நேரமும் லூசு கூடவா பேசிக்கிட்டிருக்கோம்.)




மனதை அதன் வழியிலேயே சென்று தெளிவான சிந்தனைக்கு மாற்ற வேண்டும்.
அப்படி மாற்றும் போதே நாம் அதன் விந்தையை உணர முடியும்.
மனதை அதன் வழியிலேயே சென்று நம் வழிக்கு கொண்டு வருதல் பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம்.

என் சுய ஆராய்ச்சிகள் தொடரும்.
நீங்களும் உங்கள் கருத்தை கூறலாம்.

வருகைக்கு நன்றி நண்பர்க்ளே !

8 comments:

  1. ஆராய்ச்சிகளை தொடருங்கள்.

    ReplyDelete
  2. மிகவும் தெளிவாக, விளாக்கமாக, ஆழமாக குழப்புகிறீர். இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன் -

    ReplyDelete
    Replies
    1. மேலும் ஆழமாக குழப்பவுள்ளேன். இறுதியில் மிகத் தெளிவாகச் செல்ல வேண்டும்.

      Delete
  3. உங்கள் ஊக்குவிப்பும் திட்டுக்களும் என் சிந்தனையையும் ஆராய்ச்சியையும் மேலும் தூண்டுகிறது. Keep in touch friends

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. "VERY NICE" என்டு ஒத்தச் சொல்லோட முடிச்சுக்கிடுவோம்னு பாத்தன். ஆனா முடிக்காததுக்கு ரெண்டு காரணம்
    ஒன்னு- உம்ம குசும்புக்காரன் ஸ்லாங்ல சொன்னா "அட மேல இங்கிலீசு வர்த்த ஒன்னுகூட இல்லியோன்னோ,நோக்கு கண் தெரியுதோன்னோ" அப்படீன்னு குசும்புப்பாட்டி சொன்னது
    ரென்னு- of course அதேதான் உம்மோட சிந்தனை ஆழம்,எழுத்து வசீகரம். simple ஆ சொன்னா கலக்கிட்டீங்க just awesome.
    இதத்தான் weight u சிறிதானாலும் fight u பெரிது என்பார்களோ,உம்ம பதிவு சிறிது ஆனால் பவர் அதிகம்.
    வரிக்கு வரி comment சொல்ல ஆசை ஆனா அவ்ளோ பெரிய வரிக்குதிரை அல்ல நான்.[ கடி-வரிக்குதிரை வரிவரியாகத்தான் புல் மேயுமாம், வரி மேல அவ்ளோ அக்கற அதுக்கு, மெய்யாலுமே, நம்பலண்ணா " line sense of zebra" ண்ணு google பண்ணி பாருங்க.] எனவே.
    simply your pluses 1. the deepness of your concept that u explained
    2. the mystery of thought you have
    3. the writing style you used
    4. the Technic u used to expose ur thoughts
    specially, master piece of ur posts are - introduction of kusumbukaran (writing style)
    - complicationsy of ur concept
    ரைட்டு,இந்தத் தங்கிளிசுல டைப்பி ரொம்ப டயடாப் போச்சு, அதனால நித்திரை நிமித்தம் விடை பெறுகிறேன். Goodnight to “எல்லைகளில்லா ஆய்வாளன்”( உம்மளத்தான் சரூபன் பின்னால திரும்பிப்பாக்காதயும்.[ஹி ஹி இதுதான் இலங்கத் தமுழாக்கும், ஆங்.])

    ReplyDelete
    Replies
    1. பலே! பலே!
      கருத்துரையிலேயே கலக்குறீங்க.
      பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
      Google எல்லாம் பிரிச்சு மேய்ஞ்சுடீங்க போல.
      இங்கிலீசு தங்கிலீசு எல்லாம் தல தண்ணின்னு புரிது.
      உங்க கருத்துக்களும் தூண்டுதலும் மேலும் இந்த ப்ளாக் வளர துணைபுரியும்.
      நன்றி மீண்டும் வருக !
      (குசும்புக்காரன்: டேய் இதென்ன உங்க‌ ஊராடா 'நன்றி மீண்டும் வருக !'. நீயெல்லாம் உருப்புட்ருவடா.)

      Delete

உங்கள் பொன்னான கருத்தை பதிவிட்டு தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.